
பெங்களூருவில் பெண் யூ-டியூபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அஸ்ஸாமைச் சேர்ந்த மாயா கோகோய் என்ற பிரபல பெண் யூ-டியூபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குத்திக்கொலை செய்யப்பட்ட மாயா கோகோய்யுடன், ஆரவ் ஹர்னி என்ற நபரும் நவம்பர் 23 அன்று அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மாயா கோகோய்யை ஆரவ் ஹர்னி மார்பில் பலமுறை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற இன்று(நவ.26) காலை வரை மாயாவின் சடலத்துடன் அதே அறையில் தங்கியிருந்ததாக காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். காவல்துறையினர் கூறுகையில், மாயா கோகோய் கோரமங்களாவில் பணியாற்றி வந்துள்ளார். பகுதி நேரமாக யூ-டியூபராக விடியோக்கள்(vlog) பதிவிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து துணை போலீஸ் ஆணையர் டி.தேவராஜ் கூறுகையில், “நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம், அவர் பணிபுரிந்த இடத்தில் அவரது அடையாளங்கள் பற்றி கண்டறிய ஒரு குழுவை அனுப்பியுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் கேரளத்தைச் சேர்ந்தவர். மேலும் இதுபற்றிய கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிக்கிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.