
கன்னோஜ்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள - ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த காா் விபத்தில் உத்தரப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 4 மருத்துவா்கள், ஆய்வகப் பணியாளா் ஒருவா் என 5 போ் பலியாகினர்.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த் கூறுகையில்,
லக்னெளவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சைஃபை பகுதிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.
அதிவேகமாக பயணித்த காா், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பின் மீது மோதியது. அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியும் காரின் மீது மோதியது.
இதையும் படிக்க | உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்பு பணியில் ரோபோக்கள்
இந்த விபத்தில் அனிருத் வா்மா, சந்தோஷ் குமாா் மௌரியா, அருள் குமாா் ஆகிய 4 மருத்துவா்களும், ராகேஷ் குமாா் என்ற ஆய்வகப் பணியாளரும் உயிரிழந்தனா்.
படுகாயம் அடைந்த மேலும் இருவா், டாக்டா் பீமாராவ் அம்பேத்கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
பலியான மருத்துவர்கள் விவரம்:
ஆக்ராவை சேர்ந்த அனிருத் வர்மா(29), பதோஹியை சேர்ந்த சந்தோஷ் குமார் மௌரியா(46), கண்ணாவை சேர்ந்த அருண்குமார்(34),பரேலியைச் சேர்ந்த நர்தேவ்(35) மற்றும் ஆய்வகப் பணியாளர் ராகேஷ் குமார்(38).
காயமடைந்தவர் மொராதாபாத்தைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவர் ஜெய்வீர் சிங்(39) என தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.