மூன்று ஆண்டுகளில் நான்கு மடங்கான ரூ.500 கள்ளநோட்டுகள்

கடந்த 3 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்த கள்ளநோட்டுகள்
2  ஆயிரம் ரூபாய் நோட்டு
2 ஆயிரம் ரூபாய் நோட்டு
Published on
Updated on
1 min read

கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

இது மட்டுமா? அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டும் இதற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில், கடந்த 2020-21 ஆம் ஆண்டிலிருந்து 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டறியப்படுவது மூன்று மடங்கு அதிகரித்திருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும், கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பது குறித்து மக்களவையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலில், நாட்டில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பாக ரூ.500 மற்றும் ரூ.2,000 கள்ளநோட்டுகள் அண்மையில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியத்துவம் பெறும் ரூ.500 நோட்டுகள்

தற்போது பணப்பரிமாற்றத்தில் மிக முக்கியத்துவம் பெறும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், இதில்தான் அதிக கள்ளநோட்டுகளும் புழக்கத்தில் விடப்படுகிறதாம். அதாவது 2018 - 19ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ரூ.1.09 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.500 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2022-23ஆம் ஆண்டில் ரூ.4.55 லட்சம் கோடி நோட்டுகளாக அதிகரித்திருந்தது. அடுத்த ஆண்டில் குறைந்திருந்தது.

புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, படிப்படியாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகரித்திருப்பதும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காகியிருப்பதும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதுபோல, 2020 - 21ஆம் ஆண்டிலிருந்து ரூ.2000 போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதும் மூன்று மடங்காகியிருக்கிறதாம்.

ஆனால், 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அது விரைவாக திரும்பப் பெறப்படும் என்ற தகவல்கள் பரவி வந்ததால், அடுத்தடுத்த சில ஆண்டுகளில், போலி நோட்டுகள் புழக்கம் குறைந்து வந்துள்ளது.

ரூ.2000 நோட்டின் வரலாறு

கடந்த 2016ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதது என அறிவித்தபோது ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, பணப்பரிமாற்றத்துக்கு வசதியாக அதிகளவில் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

அதாவது 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புழக்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளில் 37.3 சதவீதம் ரூ.2000 நோட்டுகள்தான் என்ற நிலையை எட்டியிருந்தது.

பிறகு படிப்படியாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டு, இறுதியாக 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கையிலிருக்கும் பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள போதுமான கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் அதிக பணமதிப்பு மிக்க நோட்டாக ரூ.500 நோட்டு மாறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com