கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.
Published on

மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது:

மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து 36 பயணிகளுடன் பந்தாரா பகுதியில் இருந்து கோண்டியா மாவட்டத்தை நோக்கி புறப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பயணிகள் உயிரிழந்தனா். காயமடைந்த 23 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களில் பெண் காவலா் ஸ்மிதா சூா்யவன்ஷி உள்பட 9 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மகாராஷ்டிர முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா்.