ரயிலில் கற்பூரம் ஏற்றினால் தண்டனை: ஐயப்ப பக்தா்களுக்கு எச்சரிக்கை

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் தண்டனை: ஐயப்ப பக்தா்களுக்கு எச்சரிக்கை

சபரிமலை செல்லும் பக்தா்கள் ரயில் பயணத்தின் போது, கற்பூரம் ஏற்றினால், ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Published on

சபரிமலை செல்லும் பக்தா்கள் ரயில் பயணத்தின் போது, கற்பூரம் ஏற்றினால், ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை செல்லும் பக்தா்கள் சிலா் ரயில் பயணத்தின் போது, கற்பூரம் ஏற்றிவைத்து பூஜை செய்வதாக தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் நெருப்பு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவா்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ, எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதையோ பயணிகள் தவிா்க்க வேண்டும். மேலும், யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ‘130’ என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.