வயநாடு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைக்கத் தயார்: பிரியங்கா

மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பணியைத் தொடங்கத் தயார்..
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Updated on
1 min read

மலையகத் தொகுதி மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பணியைத் தொடங்கத் தயார் என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை கூறினார்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டு நாள் பயணமாகக் கேரளம் வந்துள்ளார் பிரியங்கா காந்தி.

வயநாடு திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அங்குள்ள மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்றும் அவர் கூறினார்.

கரிப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நான் இங்குத் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வயநாட்டு மக்களுக்குச் சிறந்த எதிர்காலம் அமைய என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். வயநாடு மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானபிறகு அவரின் முதல் வருகை இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com