திருப்பதி பிரம்மோற்சவம்: பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார் சந்திரபாபு நாயுடு!

திருப்பதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு 14-வது முறையாக பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருமலை கோயிலில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் போது, ​​மாநில அரசு சார்பில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபாடு நடத்தினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருமலை கோயிலில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் போது, ​​மாநில அரசு சார்பில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபாடு நடத்தினார்.
Published on
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரமாண்ட பிரம்மோற்சவத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு 14வது முறையாக பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரம்மோற்சவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, மாநில அரசின் சார்பில் ஸ்ரீவாரி கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.

ஒன்பது நாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, திருமலை மலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரம் வழங்கினார்.

அவரது மனைவி புவனேஸ்வரியுடன் மாலையில் கோயிக்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சந்திரபாபு நாயுடுவும் அவரது மனைவியும் கோவிலின் பூசாரிகளிடம் வேத ஆசீர்வாதங்களையும் பிரசாதங்களையும் பெற்றனர்.

-

பின்னர், 2025 ஆம் ஆண்டிற்கான திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் காலண்டர் மற்றும் டைரியை முதல்வர் வெளியிட்டார்.

அங்கு அனைவரும் மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “பிரம்மோற்சவங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அனைவரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யும்போது புனிதத்தை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திருமலை-திருப்பதி தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலை மலையில் தங்கி வகுளமாதா சமையலறையை சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.

முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலைக்கூட விட்டுவைக்கவில்லை என்றும், கோடிக்கணக்கான பக்தர்களால் விரும்பப்படும் லட்டுகளை தயாரிப்பதற்கு தரமற்றப் பொருள்கள், விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டுக்கு பிறகு நாயுடுவின் முதல் வருகை இதுவாகும்.

உலகின் பணக்கார இந்து கோயிலின் பாதுகாவலரான திருமலை-திருப்பதி தேவஸ்தானம், தினமும் ஏழு லட்சம் லட்டுகள் சேமிக்கப்படும் என்றும், பிரம்மோற்சவத்தின் போது 45,000 பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் 1,250 திருமலை-திருப்பதி தேவஸ்தானப் பணியாளர்களும் மற்றும் 3,900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com