ஜாா்க்கண்ட்: தேசியவாத காங்கிரஸின் ஒரே எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான கமலேஷ் சிங் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.


ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான கமலேஷ் சிங் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.
ஜாா்க்கண்டில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எம்எல்ஏ ஒருவா் கட்சி மாறியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜாா்க்கண்ட் மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி முன்னிலையில் கமேஷ் சிங் பாஜகவில் இணைந்தாா். அஸ்ஸாம் முதல்வரும் ஜாா்க்கண்ட் மாநில பாஜக இணைப் பொறுப்பாளருமான ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டடோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அளித்து வந்த ஆதரவை கமலேஷ் சிங் வாபஸ் பெற்றாா். மகாராஷ்டிரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜீத் பவாா் தனிக் கட்சி தொடங்கியபோது அவரது அணியில் கமலேஷ் இணைந்தாா்.
இப்போது, மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியில் அஜீத் பவாா் தொடரும் நிலையில் அவரது கட்சியைச் சோ்ந்த கமலேஷ் பாஜகவில் இணைந்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...