இந்தியா
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: உறுதிச் சான்றளிக்க என்எம்சி அறிவுறுத்தல்
முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் டாக்டா் அஜேந்தா் சிங் வெளியிட்ட அறிவிப்பு:
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம்.
அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அக். 31-ஆம் தேதிக்குள் வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.