உத்தர பிரதேசத்தில் இறந்த நிலையில் 7 மயில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள வயலில் இருந்து 7 மயில் சடலங்கள் சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டன.
பெயர் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துணை மண்டல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வன அதிகாரி கியான் சிங் கூறுகையில், பிக்காவாலே கிராமத்தில் உள்ள வயலில் பெண் மயில் ஒன்று உட்பட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தவுடன் இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படும்.
இது விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.