வைரத் தொழிலில் கடும் நெருக்கடி: 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை!

இந்தியாவின் வைரத் தொழிலில் கடும் நெருக்கடி நிலவுவதாக குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் தகவல்
வைரத் தொழிலில் கடும் நெருக்கடி: 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை!
Published on
Updated on
2 min read

இந்தியாவின் வைரத் தொழிலில் நிலவும் கடுமையான நெருக்கடியால் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களால் பாதிக்கப்படும் வைரத் தொழிலாளர்கள்

இந்தியா முழுவதும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில் தொழில் செய்து வருகின்றனர். சூரத்தில் மட்டும் 8,00,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்தது.

ஆனால், பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களால் உந்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக வைரத் தொழில் தற்போது குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்து வருகிறது.

இதனால், வைரத் தொழிலாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வேலையின்மையால் தவித்து வருகின்றனர். அவர்களுக்கான சம்பளங்கள் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இந்த ஆபத்தான போக்கு, இந்தத் துறையை பாதிக்கும் மோசமான நிலைமைகளாகவும், பல கைவினைஞர்களை விரக்திக்கு தள்ளுகிறது என்றும் வைரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் கூறுகிறது.

6 மாதங்களில் 60 பேர் தற்கொலை

இதுகுறித்து, குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பாவேஷ் டாங்க் கூறுவதாவது, ``கடந்த 6 மாதங்களில் நிதி நெருக்கடி காரணமாக 60-க்கும் மேற்பட்ட வைரக் கைவினைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் மோசமான நிலையில் இருந்தபோதிலும், அவர்கள் அனுபவித்த துயரங்களை அரசோ அல்லது தொழில்துறையோ ஒப்புக் கொள்ளவில்லை.

குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கத்துக்கு, ஜூலை மாதத்திலிருந்து தற்கொலை உதவிக்கு 1,600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன; ஒரு நாளைக்கு சராசரியாக 50-க்கும் மேற்பட்ட அழைப்புகள்.

அவர்களில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் பேர் வேலையை இழந்த தொழிலாளர்கள். இதன்மூலம், வைர கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்க அரசின் அவசர தலையீடு தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

உலக அரசியல் பதற்றங்களும் காரணம்

ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட மோதல்கள் போன்ற காரணிகள், இந்தியாவில் வைரங்களின் வருகையை கடுமையாக பாதித்துள்ளன, இதன் விளைவாக, தொழிற்சாலை மூடல்கள், இயல்புநிலைகள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நேரம் முதலானவை குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா போன்ற முக்கியச் சந்தைகளில் வைரங்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளதாக வைரச் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com