தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன உறுதியைக் குலைக்கும் செயல்! ஹரியாணா முடிவுகள் குறித்து காங்கிரஸ்!

ஹரியாணா தேர்தல் முன்னிலை நிலவரம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்.

News image
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்- ANI
Updated On :8 அக்டோபர் 2024, 7:01 am

DIN

ஹரியாணா தேர்தல் முடிவில், மன உறுதியை குலைக்கும் விளையாட்டு விளையாடப் படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என்று நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரில் தொடக்கம் முதல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், ஹரியாணாவில் தொடக்கத்தில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றது.

இதுகுறித்து செய்தியாளருடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ்,

“தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை, மனமுடையே தேவையில்லை. மன உறுதியைக் குலைக்கும் விளையாட்டு விளையாடப்படுகிறது.

நாம் வெற்றி பெற்று ஹரியாணாவில் ஆட்சி அமைக்கப் போகிறோம், யாரும் சோர்வடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகல் 12.30 மணி நிலவரப்படி, ஹரியாணாவில் பாஜக 48, காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.