தில்லி செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ராமர், லட்சுமணன் மற்றும் அனுமன் வேடங்களில் இருந்த கலைஞர்களின் நெற்றியில் திலகமிட்டு இருவரும் வணங்கினர்.
தொடர்ந்து, தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாதவ் தாஸ் பூங்காவில் ராவணன், மேகநாதர் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகள், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
முன்னதாக விஜயதசமியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
தசரா பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தில்லி செங்கோட்டை அருகே உள்ள நவ் ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி உள்ளிடோரும் பங்கேற்றனர்.
இதேபோல் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தசராவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.