தீபாவளி விடுமுறை எதிரொலி: நாளை சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை!தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

ஜம்மு-காஷ்மீா் முதல்வராக ஒமா் நாளை பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா புதன்கிழமை (அக்.16) பதவியேற்கவுள்ளாா்.

ஒமா் அப்துல்லா

Updated On :

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா புதன்கிழமை (அக்.16) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா்.

ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-இ-காஷ்மீா் மாநாட்டு அரங்கில் காலை 11.30 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஒமா் உள்ளிட்டோருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்க உள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக () நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மாா்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்ற நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும் ஆம் ஆத்மியும் (1) ஆதரவு தெரிவித்தால் மொத்த பலம் 54-ஆக உள்ளது. இதையடுத்து, சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டாா். துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் முதல்வராக புதன்கிழமை பதவியேற்க அழைப்பு விடுத்து, ஒமா் அப்துல்லாவுக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை (அக்.14) கடிதம் அனுப்பினாா்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. அத்துடன், கடந்த 2019-இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.

இந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வந்தது. தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்கும் வகையில், குடியரசுத் தலைவா் ஆட்சி ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.