அஸ்ஸாமில் ரயில் தடம்புரண்டு விபத்து!

பயணிகள் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து...
தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட விரைவு ரயில்
தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட விரைவு ரயில்PTI
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் அக். 17 தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில், 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின் அகர்தலா - லோக்மான்யா திலக் முனையம் இடையே இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், திபலாங் ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானது.

லூம்திங் மண்டலத்துக்குட்பட்ட பர்தார்புல் மலை அருகே சென்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகள்
தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகள்PTI

இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வடகிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ரயில் என்ஜின் பெட்டி உள்பட 8 பெட்டிகள் தடம்புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சபரிமலை: புதிய மேல்சாந்தியாக அருண் குமார் தேர்வு!

விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், லூம்திங் - பாதர்பூர் இடையிலான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற ரயிலில் பயணித்த பயணிகள் குறித்து தகவல்களை அறிந்துகொள்ள ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 03674 263120, 03674 263126

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com