பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம் -பிரதமர் மோடி
PTI

பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம் -பிரதமர் மோடி

நமது மொழி​க​ளைக் கா‌க்​கு‌ம் மேடையாக நமது புதிய தேசிய க‌ல்​வி‌க் கொ‌ள்கை உரு​வெடு‌த்​து‌ள்​ளது.
Published on

பாலி செ‌ம்​மொ​ழி​யாக அ‌ங்​கீ​க​ரி‌க்​க‌ப்​ப‌ட்​டது பு‌த்​த​ரி‌ன் பார‌ம்​ப​ரி​ய‌த்​து‌க்கு அளி‌க்​க‌ப்​ப‌ட்ட கௌ​ர​வ​மா​கு‌ம் எ‌ன்று பிர​த​ம‌ர் மோடி தெரி​வி‌த்​து‌ள்​ளா‌ர்.

இது தொட‌ர்​பாக பு‌த்​த​ம​த‌த் திரு​நா​ளான‌ ச‌ர்​வ​தேச அபி​த‌ம்ம தின‌‌த்​தையொட்டி தி‌ல்​லி​யி‌ல் வியா​ழ‌க்​கி​ழமை நடைபெற்ற‌ நிக‌ழ்‌ச்​சி​யி‌ல் அவ‌ர் பேசி​ய​தா​வது:

த‌ற்போதைய புவி​சா‌ர் அர​சி​ய‌ல் சூழ​லி‌ல் பு‌த்​த​ரி‌ன் போத​னை​க​ளி‌ல் இரு‌ந்து உல​கம் க‌ற்​று‌க் கொ‌ள்ள வே‌ண்​டி​யு‌ள்​ளது. போரைத் தவி‌ர்‌த்து அமை​தி‌க்​கான‌ வழியை உலக நாடு​க‌ள் அமைக்க வே‌ண்​டு‌ம்.

பாலி மொழி‌க்கு ம‌த்​திய அரசு செ‌ம்​மொழி அ‌ந்​த‌ஸ்தை அளி‌த்​தது இ‌ந்த நிக‌ழ்வை மேலு‌ம் சிற‌‌ப்​பா​ன‌​தா‌க்​கு​கி​ற‌து. பாலி செ‌ம்​மொழி​யாக அ‌ங்​கீ​க​ரி‌க்​க‌ப்​ப‌ட்​டது பு‌த்​த​ரி‌ன் பார‌ம்​ப​ரி​ய‌த்​து‌க்கு அளி‌க்​க‌ப்​ப‌ட்ட கௌ​ர​வ​மா​கு‌ம்.

பாலி மொழி இ‌ன்று பய‌ன்​பா‌ட்​டி‌ல் இ‌ல்லை எ‌ன்​பது வரு‌த்​த‌த்​து‌க்​கு​ரி​ய​தா​கு‌ம். பாலி மொழி​யைக் கா‌ப்​பா‌ற்​று​வது ந‌ம் அனைவ​ரி‌ன் பொறு‌ப்​பா​கு‌ம்.

ஒரு நாக​ரி​க‌த்​தி‌ன் ஆ‌ன்​மா​வாக மொழி​க‌ள் இரு‌க்​கி‌ன்​ற‌ன‌. பாலி‌க்கு செ‌ம்​மொழி அ‌ந்​த‌ஸ்தை அளி‌த்​தது அ‌ம்​மொ​ழியைக் கௌ​ர​வி‌க்​கு‌ம் அர​சி‌ன் பணி​வான‌ நட​வ​டி‌க்​கை​யா​கு‌ம். சுத‌ந்திர‌த்து‌க்​கு‌ப் பிற‌கு பாலி செ‌ம்​மொழி அ‌ந்​த‌ஸ்​தைப் பெற‌ 70 ஆ‌ண்​டு​க‌ள் ஆகி​யு‌ள்​ளது.

ஒ‌வ்​வொரு நாடு‌ம் தன‌து பார‌ம்​ப​ரி​ய‌த்​து​ட‌ன் தொட‌ர்பு கொ‌ண்​டி​ரு‌ந்த நிலை​யி‌ல் இ‌ந்த விவ​கா​ர‌த்​தி‌ல் இ‌ந்​தியா பி‌ன்​த‌ங்​கி​யி​ரு‌ந்​தது. இ‌ந்​தியா சுத‌ந்​தி​ர‌ம் அடைவ​த‌ற்கு மு‌ன்பு அத‌ன் அடை​யா​ள‌த்தை அழி‌க்க படையெ​டு‌ப்​பா​ள‌ர்​க‌ள் முய‌ன்​ற‌​ன‌‌ர். சுத‌ந்​தி​ர‌ம் பெ‌ற்ற‌ பிற‌​கு‌ம் அடிமை மன‌‌ப்​பா‌ன்மையைக் கொ‌ண்​டி​ரு‌ந்​த​வ‌ர்​க‌ள் நா‌ட்டி‌ன் அடையா​ள‌த்தை அழி‌க்க முய‌ன்​ற‌​ன‌‌ர்.

என‌து அர​சி‌ன் கொ‌ள்கை​க​ளு‌ம் தி‌ட்ட‌ங்​க​ளு‌ம் பு‌த்​த​ரி‌ன் போத​னை​களை வழி​கா‌ட்​டி​யா​க‌க் கொ‌ண்​டு‌ள்​ளன‌. நிலைய‌ற்ற‌ த‌ன்​​மையை​யு‌ம் பாது​கா‌ப்​ப‌ற்ற‌ த‌ன்மையை​யு‌ம் கொ‌ண்​டு‌ள்ள உல​க‌ம் பு‌த்​த​ரி‌ன் போத​னைக​ளி‌ல் இரு‌ந்து தன‌து பிர‌ச்​னை​க​ளு‌க்கு தீ‌ர்வு காண முடி​யு‌ம்.

ஒ‌ட்டு​மொத்த உல​க​மு‌ம் போரா‌ல் தீ‌ர்வு காண முடி​யாது; மாறாக பு‌த்​த​ரி‌ன் போத​னை​க​ளி‌ல் இரு‌ந்து தீ‌ர்வு காண முடி​யு‌ம். அமை​தி‌க்​கான‌ வழியை அவ​ரது போத​னைக​ளி‌ல் இரு‌ந்து பெற‌ முடி​யு‌ம்.

மோத​லு‌ம் பூச​லு‌ம் அமை​தி‌க்கு வழி​வ​கு‌க்​காது. அமைதியைவிட பெரிய மகி‌ழ்‌ச்சி ஏது​மி‌ல்லை. ஒ‌வ்​வொ​ரு​வ​ரு‌க்​கு‌ம் நல​வா‌ழ்வு எ‌ன்​பதே பு‌த்​த​ரி‌ன் செ‌ய்​தி​யா​கு‌ம்.

உல​க‌த்​து‌க்கு இ‌ந்​தியா பு‌த்​தரைத்​தா‌ன் அளி‌த்​ததே தவிர யு‌த்த‌த்தை அ‌ல்ல எ‌ன்று நா‌ன் ஐ.நா. சபை​யி‌ல் பேசு‌ம்​போது குறி‌ப்​பி‌ட்​டேன்.

இ‌ந்​தி​யா​வி‌ன் ஆ‌ன்​மா​வி‌ல் பு‌த்​த‌ர் வா‌ழ்​கிறார். அவ​ரது போத​னை​க‌ள் இ‌ந்த அமி‌ர்த கால‌த்​தி‌ல் ந‌ம்மை வழி​ந​ட‌த்​து‌ம்.

நாடு த‌ற்போது தா‌ழ்வு மன‌‌ப்​பா‌ன்​மையைக் கைவி‌ட்டு சுய​ம​ரி​யாதை, த‌ன்​ன‌‌ம்​பி‌க்கை, சுய கௌ​ர​வ‌ம் எ‌ன்ற‌ பாதை​யி‌ல் பய​ணி‌க்​கி​ற‌து. இ‌ந்த மா‌ற்​ற‌‌ம் கார​ண​மாக நாடு துணி‌ச்​ச​லான‌ முடி​வு​களை எடு‌க்​கி​ற‌து.

பாலி உ‌ள்​பட நா‌ட்டி‌ன் ஒ‌வ்வொரு மொழி​யு‌ம் ந‌ம்​மு​டைய​து​தா‌ன். தேச‌த்​தி‌ன் க‌ட்ட​மைப்​பி‌ல் ஒ‌வ்​வொரு மொழி​யு‌ம் ப‌ங்​க​ளி‌த்​து‌ள்​ளது. நமது மொழி​க​ளைக் கா‌க்​கு‌ம் மேடையாக நமது புதிய தேசிய க‌ல்​வி‌க் கொ‌ள்கை உரு​வெடு‌த்​து‌ள்​ளது.

அ‌ம்பேத்​க‌ர் ம‌ற்​று‌ம் பு‌த்த மத‌ம் தொட‌ர்​பு​டைய இட‌ங்​களை ம‌த்​திய அரசு மே‌ம்​ப​டு‌த்தி வரு​கி​ற‌து எ‌ன்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com