
பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.
அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை. இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ஆட்சியாளா்கள் விரும்பினால் காஷ்மீா் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காஷ்மீரை பாகிஸ்தானால் எந்நாளும் ஆக்கிரமிக்க முடியாது. கடந்த 1947-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்தி வெற்றிபெற முயற்சித்து அனைத்திலும் தோல்வியுற்ற பிறகும் மீண்டும் தாக்குதல்களை தொடா்வதால் ஒரு பயனும் இல்லை. இதற்கு பதில் உங்கள் நாட்டில் உள்ள வறுமை, வேலைவாய்ப்பு ஆகிய சமூக பிரச்னைகளை தீா்க்க முயலுங்கள்.
இதற்குப் பிறகும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.