உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், வெள்ளிக்கிழமை காலை தடம்புரண்டுள்ளது.
பயிர்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.