தேசியவாத காங்கிரஸில் இணைந்த பாபா சித்திக் மகன்!

பாபா சித்திக்கின் மகன் ஸீஷான் சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.
அஜீத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்த ஸீஷான் சித்திக்
அஜீத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்த ஸீஷான் சித்திக்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகன் ஸீஷான் சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜீத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாந்த்ரா தொகுதி எம்எல்ஏவான ஸீஷான் சித்திக் கட்சியின் சட்டவிரோத செயல்களுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து ஸீஷான் சித்திக் கூறுகையில், “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான நாள். இந்தக் கடினமான சூழலில் என்னை நம்பிய அஜீத் பவார், பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளேன். மக்களில் அன்பு மற்றும் ஆதரவில் நான் மீண்டும் பாந்த்ரா தொகுதியில் போட்டி வெற்றிபெறுவேன்” என்றார்.

32 வயதான ஸீஷான் சித்திக் 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சியின் பிரிஹான்மும்பை நகராட்சியின் முன்னாள் மேயரான விஷ்வநாத் மஹாதேஸ்வரை தோற்கடித்து பாந்தரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரானார்.

முன்னதாக, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com