

ஹைதராபாத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் அபிட்ஸில் உள்ள பட்டாசு கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவரின் கையில் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் கடையில் பட்டாசு பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்து காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.