
10 வயதான ஆன்மீகப் பேச்சாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தில்லியைச் சேர்ந்த அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவன், ஆன்மீகப் பயணத்தை தனது 3 வயதில் இருந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபினவுக்கு திங்கள்கிழமையில் (அக். 28) லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக, அவரது தாயார் ஜோதி அரோரா தெரிவித்துள்ளார்.
ஜோதி அரோரா தெரிவித்ததாவது, ``நேற்றிரவில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து எனக்கொரு அழைப்பு வந்தது; ஆனால், அழைப்பினை நான் தவறுதலாக ஏற்காமல் இருந்துவிட்டேன். இதனைத் தொடர்ந்து, இன்றும் அதே எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், அபினவ் கொல்லப்படவிருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அபினவ் பக்தியைத் தவிர வேறு எதுவுமே செய்ததில்லை’’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? கூட்டணியா? இபிஎஸ் பதில்
மேலும், ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும், எம்.எல்.ஏ.வான ஸீஷான் சித்திக்குக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையில் (அக். 25) மற்றுமொரு கொலை மிரட்டல் அழைப்பு வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் கொலை மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இல்லை என்பதும், காய்கறி விற்பவர் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.