மோமோஸ் தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

ஹைதராபாத்தில் மோமோஸ் தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
மோமோஸ்
மோமோஸ்
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்தில் இயங்கி வரும் உணவகத்தில் விநியோகிக்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு சிலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தயாரிப்புக் கூடத்தைப் பார்வையிட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையோர உணவகங்களில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பெண் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கைரதாபாத் பகுதியில், மோமோஸ் தயாரிப்புக் கூடம் இயங்கி வந்த நிலையில், காவல்துறை உதவியோடு அதனைக் கண்டுபிடித்து, அங்குச் சென்ற அதிகாரிகள், உணவுக்கூடம் இயங்கி வந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உணவுக் கூடத்தை நடத்தி வந்தவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் அங்கே பிரச்னை என்று அவர்கள் கூறியிருப்பதாவது, உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் எந்த வழிமுறையும் அங்கே பின்பற்றப்படவில்லை.

மிகவும் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்யப்பட்டுள்ளது. மோமோஸ் தயாரிப்பு மாவு, அப்படியே குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு எந்த பேக்கும் செய்யப்படவில்லை.

அதன் அருகே திறந்தநிலையில் குப்பைத்தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அங்கே தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com