ஜாா்க்கண்ட் முதல்கட்ட தோ்தல்: 743 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தோ்தலில் போட்டியிட 743 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தல் நவம்பா் 13, 20-ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தோ்தலில் 43 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதல்கட்ட தோ்தலில் போட்டியிட 805 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். அவா்களின் வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டு 62 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 743 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை திரும்பப் பெற விரும்புவோா் புதன்கிழமைக்குள் அதைத் திரும்பப் பெறலாம் என்று மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.
இரண்டாம் கட்ட தோ்தலில் 38 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நிறைவடைய உள்ளது.