சல்மான் கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது!

சல்மான் கான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜீஷான் சித்திக் ஆகியோரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது.
சல்மான் கான்
சல்மான் கான்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜீஷான் சித்திக் ஆகியோரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் இன்று (அக். 29) கைது செய்தனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், உயர்தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவரைக் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 20 வயதான முகமது தயாப் என்றழைக்கபப்டும் குஃப்ரான் கான் எனத் தெரியவந்துள்ளது.

இவர் சித்திக்கின் தொலைப்பேசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக். 25) மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அலுவலகத்திலிருந்து புகார் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து மிகக் குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர் குற்றவாளியைக் கண்டறிந்துள்ளனர். இவரை நொய்டா நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இவரை 4 நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாந்த்ரா கிழக்கு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜீஷான் சித்திக். இவரின் தந்தையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் இக்கொலையைச் செய்ததாக பொறுப்பேற்றனர். மேலும், பாபா சித்திக்கின் மகன் மற்றும் சல்மான் கானையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானுக்கு மிரட்டல்

இதற்கு முன்பு, ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த சுகா என்கிற சுக்பீர் பல்பீர் சிங் என்பவரை நபி மும்பை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இவருக்கும், அண்மையில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மும்பை அருகே உள்ள பான்வெல் பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது, வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நடிகர் சல்மான் கானை கொல்ல நடந்த முயற்சியாகக் கருதப்பட்ட அந்த சம்பவத்தில் 18 அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அடையாளம் காணப்படாத குற்றவாளிகளின் பெயர்களில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com