புதுதில்லி: இந்திய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபட்ட தலைவர், மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31-ஆம் தேதி ’தேசிய ஒற்றுமை நாளாக’ கொண்டாடப்படுகிறது. 'தேசிய ஒற்றுமை நாளன்று', சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேசிய ஒற்றுமை நாளையொட்டி நடத்தப்படும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, இன்று (அக். 29) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.