
இருசக்கர வாகனத்தில் பட்டாசு வாங்கிச் சென்ற நபர் ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு பகுதியில் தீபாவளியை கொண்டாட பட்டாசுகளை வாங்கிக் கொண்டு இரு இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் நேற்று(அக். 31) சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அதில் அந்த வாகனம் தீப்பற்றியதுடன் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற இருவரில் ஒரு நபர் உயிரிழந்தார். வாகன விபத்து ஏற்பட்ட இடத்தில் நின்றிருந்த நபர்களுக்கும் பலத்த தீக்காயம் உண்டானது. அவர்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகனத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறும் காட்சி அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிரது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.