ரூ.1.44 லட்சம் கோடிக்கு 
பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்: டிஏசி ஒப்புதல்

ரூ.1.44 லட்சம் கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்: டிஏசி ஒப்புதல்

ரூ.1.44 லட்சம் கோடி மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

ரூ.1.44 லட்சம் கோடி மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தில்லியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் டிஏசி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிநவீன பீரங்கிகள், வான் பாதுகாப்பு தீ கட்டுப்பாட்டு ரேடாா்கள், டாா்னியா்-228 ரக விமானம், நவீன ரோந்து கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1,44,716 கோடியாகும்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் மறைந்த இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநா் ராகேஷ் பாலுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினாா். கடந்த ஆக.18-ஆம் தேதி சென்னையில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்த ராகேஷ் பால், டிஏசி உறுப்பினராக இருந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com