வயநாடு நிலச்சரிவு: ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய ராகுல்!

வயநாடு நிலச்சரிவில் நிவாரணப் பணிகளுக்கு ஒரு மாத ஊதியத்தை ராகுல் காந்தி நிவாரணமாக வழங்கியுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

வயநாடு நிலச்சரிவில் நிவாரண பணிகளுக்கு ஒரு மாத சம்பளத்தை ராகுல் காந்தி நிவாரணமாக வழங்கியுள்ளார்.

கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாட்டையை உலுக்கியது. இந்த நிலச்சரிவில் எண்ணற்ற பாதிப்பும் பலியும் பதிவானது. இந்த நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஒரு மாத ஊதியத்தை அளிக்க முன்வந்துள்ளார்.

ராகுல் காந்தி
சிங்கப்பூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

வயநாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் பேரழிவு தரும் சோகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்கொண்ட கற்பனைக்கு எட்டாத இழப்புகளிலிருந்து மீள அவர்களுக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கு உதவுகின்ற வகையில் எனது ஒரு மாத ஊதியத்தைக் கேரள பிரதேச காங்கிரஸ் கமிடியின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன்.

ராகுல் காந்தி
இந்தூரில் பாலியல் வன்கொடுமை: காவல்துறை மெத்தனத்தால் நீதிமன்றத்தை நாடிய பெண்!

இந்தியர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வயநாட்டு மக்களுக்க நாம் அளிக்கும் சிறிய நிதியும் பெரும் பங்களிப்பாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப நாமும் உதவுவோம் என்றார்.

நிதி திரட்டலின் ஒரு பகுதியாக, Stand with Wayand - INC மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மக்கள் நிதியுதவி அளிக்கலாம் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். எ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com