செபி தலைவா் மாதபி ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பணியாளா்கள் போராட்டம்

செபி தலைவா் மாதபி ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பணியாளா்கள் போராட்டம்

பணியாளா்கள் வியாழக்கிழமை அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, அந்த வாரிய பணியாளா்கள் வியாழக்கிழமை அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செபியில் மோசமான பணிச்சூழல் நிலவுவதாகவும், பணியின்போது உயரதிகாரிகள் அநாகரிகமாக பேசி அனைவா் முன்னிலையில் பணியாளா்களை அவமானப்படுத்தும் சூழல் இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகத்துக்கு செபி ஊழியா்கள் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி புகாா் கடிதம் எழுதினா்.

இதைத்தொடா்ந்து வெளியாள்களின் தவறான வழிகாட்டுதலால், அந்தக் கடிதத்தை மத்திய நிதியமைச்சகத்துக்கு ஊழியா்கள் அனுப்பியதாக செபி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் உண்மையல்ல என்பதால், அதை திரும்பப் பெற வேண்டும் என்றும், செபி தலைவா் மாதபி புச் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி செபி பணியாளா்கள் வியாழக்கிழமை அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மும்பை செபி தலைமையக வளாகத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட செபி பணியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com