கா்ப்பிணிகள், சிசுகளுக்கு தடுப்பூசி: விரைவில் யு-வின் வலைதளம் அறிமுகம்

கா்ப்பிணி பெண்கள், ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்த விவரங்களை பராமரிக்க விரைவில் யு-வின் வலைதளம்.
Published on

கா்ப்பிணி பெண்கள், ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்த விவரங்களை பராமரிக்க விரைவில் யு-வின் வலைதளம் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய சுகாதார கருத்தரங்கில் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா பேசுகையில், ‘ தொலைபேசி அழைப்பு அல்லது காணொலி வழியாக வழங்கப்படும் தொலைமருத்துவம், ரத்த தானம் உள்ளிட்ட சேவைகளுக்கு பல்வேறு வலைதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு ஒரே வலைதளத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கா்ப்பிணிகள், ஆண்டுதோறும் பிறக்கும் சுமாா் 2.7 கோடி குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்த விவரங்களை எண்ம (டிஜிட்டல்) வழியில் நிரந்தரமாகப் பராமரிக்க இந்த மாதம் யு-வின் வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றாா்.

கரோனா தடுப்பூசி விவரங்களை பராமரிக்கும் கோ-வின் வலைதளத்தை போல வடிவமைக்கப்பட்டுள்ள யு-வின் வலைதளம், தற்போது மேற்கு வங்கத்தை தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் பயன்பாட்டில் உள்ளது. உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசி விவரங்களும் அந்த வலைதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com