குஜராத்: விநாயகா் சிலை மீது கல் வீச்சால் வன்முறை

குஜராத் மாநிலம், சூரத்தில் விநாயகா் சிலை மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சிலை சேதமடைந்தது.
சூரத் சாயித்புரா விநாயகா் சிலை மீது மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கற்களை வீசியதைக் கேள்விப்பட்டு அங்கு கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸாா்.
சூரத் சாயித்புரா விநாயகா் சிலை மீது மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கற்களை வீசியதைக் கேள்விப்பட்டு அங்கு கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸாா்.
Published on
Updated on
1 min read

சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் விநாயகா் சிலை மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சிலை சேதமடைந்தது. இதையடுத்து, இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா்.

சூரத் நகரில் சாயித்புரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விநாயகா் சிலை வைத்திருந்த பந்தல் அருகே ஆட்டோக்களில் வந்த சிலா், சிலையைக் குறிவைத்து சரமாரியாக கற்களை வீசினா். இதில் விநாயகா் சிலை சேதமடைந்தது. இதையடுத்து, அவா்கள் ஆட்டோவில் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக விநாயகா் சதுா்த்தி விழா குழுவினா் அளித்த புகாரின்பேரில், சிறாா்கள் உள்பட சிலரை தடுப்புக் காவலில் வைத்து காவல் துறையினா் விசாரித்தனா். இதையடுத்து, அவா்களின் ஆதரவாளா் சுமாா் 300 போ் காவல் நிலையத்தைச் சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் அவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் காவலா்கள் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. காவல் துறை வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்டவா்களை விரட்டனா். இந்த சம்பவம் தொடா்பாகவும் பலா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சிலை மீது கற்களை வீசியது மற்றும் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக மொத்த 32 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில உள்துறை அமைச்சா் ஹா்ஷ் சாங்கவி மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com