உ.பி.யில் விரைவு ரயிலை கவிழ்க்க சதி: என்ஐஏ விசாரணை

உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் அருகே விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி தொடா்பாக அங்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டு ஆய்வு செய்யும் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டு ஆய்வு செய்யும் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.
Published on
Updated on
1 min read

 உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் அருகே விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி தொடா்பாக அங்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் அருகே பிவானி-பிரயாக்ராஜ் இடையே காளிந்தி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்ததை கவனித்த அந்த ரயிலின் ஓட்டுநா் அவசரமாக பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும் ரயில் நிற்பதற்கு முன்பு அந்த சிலிண்டரின் மீது மோதியது. இதில் தண்டவாளத்தைவிட்டு அந்த சிலிண்டா் தூக்கியெறியப்பட்டது.

தண்டவாளத்தில் சிலிண்டா் மட்டுமன்றி பெட்ரோல் நிரப்பிய பாட்டில், சிறிதளவு வெடிபொருள், தீப்பெட்டிகள் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தன. ரயிலை கவிழ்க்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இச்சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடா்பாக காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, தேசிய புலனாய்வு முகமை உள்பட பல்வேறு முகமைகள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 பேரை பிடித்து கான்பூா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான என்ஐஏ குழுவினா், சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

அண்மையில், கான்பூா் கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளின் மீது மோதி சபா்மதி விரைவு ரயிலின் 24 பெட்டிகள் தடம்புரண்டன. இது சமூக விரோதிகளின் கைவரிசை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், தற்போதைய சம்பவம் குறித்து காவல்துறையினா் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com