சாட்சியில்லாமல் எப்படி நம்புவது: பாலியல் புகாரளித்த விமானப்படை பெண் அதிகாரி அலைக்கழிப்பு

விமானப்படை அதிகாரி அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஒருவருக்கு, தனது மூத்த அதிகாரியான விங் கமாண்டர் பாலியல் துன்புறுத்தல் புகாரில் நடவடிக்கை எடுக்க மறுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில், இந்திய விமானப்படையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் புட்காம் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரில் தெரிவித்ததாவது, ``கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பரிசளிப்பதாகக் கூறி, மூத்த அதிகாரியின் அறைக்கு அழைத்தார். அறையினுள்ளே சென்றதும், என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டார்.

ஆனால், அவரிடம் இருந்து தப்பித்துச் சென்று, வேறு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இருப்பினும், இந்த சம்பவத்தினை மூடிமறைக்கவும், நிர்வாகத்தின் தவறுகளை மறைக்கவும்தான் அவர்கள் முயன்றனர்.

கோப்புப் படம்
'நிலையான தேர்தல் களம் இருந்திருந்தால்...' - ராகுல் கருத்துக்கு தேஜஸ்வி ஆதரவு!

நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாமல் எவ்வாறு நம்புவது? என்று கேள்வி எழுப்பினர். பாலியல் வன்கொடுமை என்பது சாட்சியுடன் நிகழ்த்தப்படாது என்பதைக் கூடவா அவர்கள் அறியமாட்டார்கள்? என்று கூறினேன். அதுமட்டுமின்றி, இடைக்கால நிவாரணம் கோரி பல முறை விடுப்பு கேட்டும், ஒவ்வொரு முறையும் விடுப்பு மறுக்கப்பட்டது.

துஷ்பிரயோகம் செய்பவருடன் சேர்ந்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனிப்பட்ட தகவல்தொடர்புகள் அதிகாரபூர்வமற்ற முறையில் கண்காணிக்கப்பட்டன. என்னுடன் பேசும் நபர்களும் உயர் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் துன்புறுத்தல், மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகிறேன்; 24 மணிநேரமும் ஆய்வுக்கு உட்பட்டு, எனது சமூக வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

துன்புறுத்தல் என்னை தற்கொலை எண்ணங்களுக்குத் தூண்டியது. என்னால் எனது அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. இந்த சித்ரவதையை நான் மிக நீண்ட காலமாக அனுபவித்து வருகிறேன். நான் முற்றிலும் உதவியற்றவளாக உணர்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com