
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவலுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, உச்ச நீதிமன்றத்துக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் சுனிதா கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை(செப்.13) ஜாமீன் வழங்கியது.
இதுதொடர்பாக சுனிதா கேஜரிவாலின் எக்ஸ் பதிவில்,
"ஆம் ஆத்மி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்"! முதல்வர் கட்டாயம் விடுதலையாவார் என்று கட்சியின் உறுதிக்கு எனது பாராட்டுக்கள். மற்ற தலைவர்களும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, கேஜரிவாலுக்கு ரூ.10 லட்சம் ஜாமீன் பத்திரம் மற்றும் இருநபர் பிணையும் வழங்கி ஜாமீனில் விடுவித்துள்ளது.
இந்த வழக்கின் தகுதி குறித்து பகிரங்கமாகக் கருத்து எதுவும் தெரிவிக்கக் கூடாது என்றும் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கலால் வழக்கில் அமலக்கத் துறையால் தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கலால் கொள்கை வழக்கில் சிக்கிய கேஜரிவால்
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிசந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கை செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறையின் வழக்கில் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 26ல் சிபிஐயால் கேஜரிவால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.