கெளதம் அதானி
கெளதம் அதானிகோப்புப் படம்

அதானிக்கு மீண்டும் ஓர் இடியா?

கென்யாவில் விமான நிலையத்தை அதானி நிறுவனம் கையகப்படுத்தும் ஒப்பந்தத்துக்கு கென்ய மக்கள் எதிர்ப்பு
Published on

கென்யாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கையகப்படுத்த திட்டமிருந்த அதானி குழுமத்தின் ஒப்பந்தத்தை எதிர்த்து கென்யர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கென்யாவில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை நடத்துவதற்கான அதானி குழுமம் எடுத்து நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், விமான நிலையத்தை, தனியார் நிறுவனம் கையகப்படுத்தினால், அங்கு பணிபுரியும் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று கூறி, அதானிக்கு எதிராக `அதானி செல்ல வேண்டும்’ என்ற முழக்கங்களுடன் கென்யா விமானப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, போராட்டத்தைக் கலைத்த காவல்துறையினர், போராட்டக்காரர்கள்மீது தடியடியும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கென்ய அரசு, ``கென்யா விமான நிலையத்தை நவீனமயமாக்க விரும்புகிறதேதவிர, அதனை விற்பனை செய்ய விரும்பவில்லை. முன்மொழியப்பட்ட தனியார் கூட்டாண்மை ஒப்பந்தம் தொடருமா என்பது குறித்து, இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அரசும், கென்யா விமானப் போக்குவரத்து தொழிலாளர் சங்கமும் 10 நாள்களுக்குள், முன்மொழிவுகளின் ஆவணங்களை மறுஆய்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் ஏதேனும் தொடர்ந்தால், தொழிற்சங்கம்தான் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கென்யாவின் சர்வதேச முக்கிய விமான நிலையத்தின் நிர்வாகத்தை அதானி குழுமத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, கென்யாவின் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியதன்மூலம், அதானி நிறுவனத்திற்கு ஒரு தடை விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com