
அன்னா ஜோஸ்
டிமென்ஷியா வயதானவர்களை மட்டுமே பாதிக்கும், டிமென்ஷியா, அல்சைமர் இரண்டும் ஒன்றுதான்...
இவ்வாறு டிமென்ஷியா எனும் மறதி நோய் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் எர்ணாகுளம் அப்போலோ அட்லக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு மருத்துவர் டாக்டர் பார்த்தசாரதி.
டிமென்ஷியா வயதானவர்களை மட்டுமே பாதிக்கும்
டிமென்ஷியா பொதுவாக 64 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கிறது. இது ஆரம்பகால டிமென்ஷியா என்றும் அழைக்கப்படுகிறது. 65 வயதிற்குட்பட்டவர்களில் கண்டறியப்படும் டிமென்ஷியா இதுவாகும். ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா, குடும்ப அல்சைமர் நோய், டவுன்ஸ் சிண்ட்ரோம் போன்றவையும் 65 வயதிற்குட்பட்டவர்களை பாதிக்கலாம்.
டிமென்ஷியா, அல்சைமர் இரண்டும் ஒரே மாதிரியானவை
டிமென்ஷியா எனும் மறதி நோய், அறிவாற்றல், நினைவாற்றல், சிந்தனை, நடத்தை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அல்சைமர் நோய் என்பது ஒரு குறிப்பிட்ட வகை டிமென்ஷியா ஆகும். அதாவது டிமென்ஷியா வகைகளில் இதுவும் ஒன்று. அல்சைமர் ஒரு நியூரோடிஜெனரேட்டிவ் கோளாறு. இது நினைவாற்றல், அறிவாற்றலை பாதிக்கிறது.
அல்சைமர் நோய் முதுமையின் ஒரு பகுதியாகும்
அல்சைமர் நோயின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். 65 முதல் 84 வயதுடையவர்களில் 13 பேரில் ஒருவருக்கும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்று பேரில் ஒருவருக்கும் அல்சைமர் உள்ளது. இருப்பினும், அல்சைமர் முதுமையில் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூற முடியாது. அதுபோல அல்சைமர் ஏற்பட வயது மட்டும் காரணம் அல்ல.
டிமென்ஷியாவுக்கு சிகிச்சை இல்லை
டிமென்ஷியா ஏற்படுவதைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தூக்கத்தில் பிரச்னை உள்ளது. இதனால் மறதியும் அதிகம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க சிகிச்சை அளிக்க முடியும்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் இதுவும் நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தமிழில்: எம். முத்துமாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.