
பிரதமரின் குடும்பத்தில் புதிதாக ஒருவர் இணைந்திருக்கார். அவருக்கு தீபஜோதி என பிரதமர் மோடி பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் புது தில்லி, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு புதிதாக கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.
இந்த கன்றுக்கட்டியை பிரதமர் நரேந்திர மோடி தனது கையில் மிகவும் பாசத்துடன் வைத்து கொஞ்சி வரும் விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஒளியின் அடையாளமாக, இந்தக் கன்றுக்குட்டியின் நெற்றியில் ஒரு வெள்ளை திலகம் போன்ற அமைப்பு இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனால், அந்த கன்றுக்குட்டிக்கு தீபஜோதி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விடியோவை பகிர்ந்து, பிரதமர் மோடி, தீப ஜோதி என பெயரிட்டதன் காரணத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும், பிரார்த்தனை மற்றும் அன்புடன் கன்றுக்குட்டியை அவர் வரவேற்கும் விடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
அதில், கன்றுக்குட்டியின் நெற்றியில், பிரதமர் மோடி முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தனது வீட்டுக்குள்ளும், தோட்டத்திலும், தீபஜோதியை கையில் ஏந்தியபடி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.