
புது தில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு, சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் செப். 12ஆம் தேதி காலமானார். சுவாசப் பிரச்னை காரணமாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது உடல், வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பிறகு அங்கிருந்து அவரது உடல் இன்று தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை வந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பல தலைவர்கள், இன்று சீதாராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மருத்துவ மாணவர்களின் ஆராயச்சி காரணங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் பல்வேறு இடதுசாரி தலைவர்களின் உடல்களும் மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக அளிக்கப்பட்டுளள்து குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.