அயோத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பறிக்கும் யோகி ஆதரவு தொழிலதிபர்கள்!

அயோத்தியில் விவசாயிகளுக்கும் தொழில் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி...
akhilesh
அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)x
Published on
Updated on
1 min read

அயோத்தியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடனும், பாதுகாப்புடனும் தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து வருவதாக சமாஜவாதி கட்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

மேலும், நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக விவசாயிகளுடன் வணிக நிறுவனத்தினர் சண்டை போடுவதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் கேட்டால், எவ்வித புகாரும் வரவில்லை என்று பொய் கூறுவதாகவும் சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது.

யோகி ஆதரவில் ஆக்கிரமிப்பு

சமாஜவாதி கட்சியின் ஊடகப் பிரிவின் எக்ஸ் கணக்கில், இரண்டு விடியோக்கள் பகிரப்பட்டு, அயோத்தில் உள்ள வணிக நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதல் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின், அறிவுறுத்தல் பேரில் அவரின் கூட்டாளிகள் பாதுகாப்புடன் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், ராமர் கோவில் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தி சொத்துக் குவிப்புக்கான பகுதியாக மாறிவிட்டது, பாஜக, முதல்வர் யோகி, தொழிலதிபர்கள் அனைவரும் நிலத்தை ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள் என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலுகட்டாயமாக ஆக்கிரமிப்பு

மேலும், சமாஜவாதி வெளியிட்ட அறிக்கையில், தனியார் குழுமம் ஒன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாஞ்சி சமூக மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் குண்டர்கள் விவசாயிகளை அடித்து துன்புறுத்தியதுடன் முதல்வரின் உத்தரவின் பேரின் விவசாயிகள் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “அயோத்தியில் விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, கோடீஸ்வரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உபி அரசு இன்னும் ஆட்சியில் இருக்கிறதா? அல்லது ஓய்வு பெற்றுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனம் மறுப்பு

சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டிய தனியார் நிறுவனம், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அந்த நிலத்தை தங்களின் நிறுவனத்துக்கு ஒரு விவசாயி விற்றதாகவும், அதனை கையகப்படுத்த சென்றபோது, குண்டர் கும்பல் எங்கள் ஊழியர்களை லத்திகளுடன் தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் எங்கள் ஊழியர் ஒருவரின் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், புகார் அளித்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

அயோத்தி காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் வெளியிட்ட செய்தியில், “அயோத்தி காவல் ஆய்வாளரால் புகாரின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com