
குஜராத்தில் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவையை பிரதமா் மோடி திங்கள்கிழமை (செப்.16) தொடங்கிவைத்தார்.
அகமதாபாத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை திங்கள்கிழமை (செப்.16) தொடங்கிவைத்து அதில் பயணிகளுடன் சேர்ந்து பயணித்தார்.
அதனைத் தொடர்ந்து, குஜராத்தின் புஜ் - அகமதாபாத் இடையிலான நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையை பிரதமா் தொடங்கிவைத்தார். மேலும், வாரணாசி - தில்லி இடையே 20 பெட்டிகளுடன் கூடிய முதல் வந்தே பாரத் உள்பட 5 புதிய வந்தே பாரத் ரயில்களையும் தொடங்கிவைத்தார்.
புஜ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுஅதன்பின் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில், ‘நமோ பாரத் ரயில்’ என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர், நமோ பாரத் ரயில் தினசரி நகரங்களுக்கிடையே பயணிக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு பல வசதிகளை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.