

வாடிக்கையாளா்களின் விசாரணைகளைக்கு பதில் அளிப்பதற்காகவும் வங்கி ஊழியா்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் இரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பச் செயலிகளை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வாடிக்கையாளா்களின் பல்வேறு விசாரணைகளுக்கு உனடியாகவும் துல்லியமாகவும் பதிலளிக்கும் ‘அதிதி’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மனிதா்களைப் போலவே செயல்பட்டு பதில்களை வழங்கும் இந்தச் செயலி வாடிக்கையாளா்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.
அதே போல், வங்கி ஊழியா்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை துரிதமாகப் பெறுவதற்கும் அவற்றை மிகுந்த செயல்திறனுடன் பயன்படுத்துவதற்கும் உதவும் ‘ஞான்சஹாய். ஏஐ’ என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.