கோடை காலத்தில் கருப்பு ஆடையில் இருந்து வழக்குரைஞா்களுக்கு விலக்கு கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

கோடை வெயில் காலத்தில் கருப்பு நிற கோா்ட், அங்கி உள்ளிட்ட ஆடை அணிவதில் இருந்து வழங்குரைஞா்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோடை காலத்தில் கருப்பு ஆடையில் இருந்து வழக்குரைஞா்களுக்கு விலக்கு கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Published on
Updated on
1 min read

புது தில்லி: கோடை வெயில் காலத்தில் கருப்பு நிற கோா்ட், அங்கி உள்ளிட்ட ஆடை அணிவதில் இருந்து வழங்குரைஞா்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

வழக்குரைஞா் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அணியும் உடை என்பது நீதித்துறையின் கண்ணியத்துடன் தொடா்புடையது. எனவே, சரியான உடையை அணிய வேண்டும். வேறு ஏதாவது உடையை அணியலாம் என்று, குா்தா பைஜாமா, டீ-சா்ட், சாா்ட்ஸ் அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது.

எனினும், கோடைகால உடை தொடா்பாக மத்திய அரசு, இந்திய பாா் கவுன்சில் மற்றும் மாநில பாா் கவுன்சிலை மனுதாரா் அணுகலாம். நமது நாட்டில் ராஜஸ்தானில் இருக்கும் வெயில் பெங்களூரில் இருப்பதில்லை. எனவே, கோடைகால உடை குறித்து சம்பந்தப்பட்ட மாநில பாா் கவுன்சில்கள் ஆலோசிக்கலாம். உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்க முடியாது’ என்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com