
குலாப்கர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசு அதை குழிதோண்டி புதைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பத்தேர்-நாக்சேனி சட்ட பேரவைத் தொகுதிக்குட்பட்ட குலாப்கர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
இந்தப் பகுதி உள்பட ஜம்மு}காஷ்மீரில் கடந்த 1990-இல் பயங்கரவாதச் செயல்கள் நிகழத் தொடங்கின.
இதனால் பலரும் உயிர்த் தியாகம் செய்தனர். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் நாங்கள் அதை குழிதோண்டி புதைப்போம் என்பதை ஜம்மு}காஷ்மீர் மக்களுக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன்.
கடந்த 1990-ஆம் ஆண்டுகளைப் போலவே தற்போதும் பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்டவும், அதை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்தால் இங்கு பாஜக தலைவர்களான அனில் பரிஹார், அஜீத் பரிஹார், ஆர்எஸ்எஸ் தலைவர் சந்தர்காந்த் சர்மா உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறைகளில் இருந்து பயங்கரவாதிகளை விடுதலை செய்வோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸýம் வாக்குறுதி அளித்துள்ளன. தற்போது மத்தியில் நடைபெறுவது மோடியின் ஆட்சியாகும். எனவே, இந்திய மண்ணில் பயங்கரவாதத்தைப் பரப்ப இனி யாரும் துணிய மாட்டார்கள் என உறுதி கூறுகிறேன்.
தேசிய மாநாட்டுக் கட்சி}காங்கிரஸ் கூட்டணியால் ஜம்மு}காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாது.
ஜம்மு}காஷ்மீரில் கிராம பாதுகாப்பு வீரர்களையும் சிறப்பு காவல் துறை அதிகாரிகளையும் பாஜக அரசு வலுப்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு பழைய துப்பாக்கிகளுக்கு பதிலாக அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்த இடத்தில் இருந்தும் இங்கு வர விரும்பும் பயங்கரவாதிகள் இந்த மலைப்பகுதியில் தங்கள் முடிவைச் சந்திக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.
ஒருபுறம் தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் உள்ளன. மறுபுறம் பாஜக உள்ளது.
இந்த இரு சக்திகளுக்கு இடையில் நடைபெறுவதே தற்போதைய தேர்தலாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு}காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியல் சாசனத்தின்
370}ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவருவோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சி}காங்கிரஸ் கூட்டணி கூறுகிறது.
அந்தப் பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டுமா? என்று கூறுங்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், பச்சாரிகள், குஜ்ஜர்கள் போன்ற சமூகத்தினருக்கு பாஜக அளித்துள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள். எனினும், யாரும் கவலைப்பட வேண்டாம். ஒமர் அப்துல்லாவின் கட்சியாலோ, ராகுல் காந்தியின் கட்சியாலோ ஜம்மு}காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாது என்று அமித் ஷா பேசினார்.
இதனிடையே, கிஷ்த்வார் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் "ஜம்மு}காஷ்மீரில் இரு சக்திகளுக்கு இடையே தேர்தல் நடைபெறுகிறது. ஒருபுறம் தேசிய மாநாட்டுக் கட்சி}காங்கிரஸ் கூட்டணியும், மறுபுறம் பாஜகவும் உள்ளன. இது பாஜகவுக்கும், காந்தி}அப்துல்லா குடும்பங்களுக்கும் இடையிலான போட்டியாகும்.
அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டு வர ஒருதரப்பும், அதைத் தடுத்து நிறுத்த மறுதரப்பும் விரும்புகின்றன. ஓர் அரசியல்சாசனம், ஒரு கொடி, ஒரு பிரதமர் என்ற பிரேம்நாத் டோக்ராவின் கொள்கையை பாஜக பின்பற்றுகிறது. ஜம்மு}காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். அதை யாராலும் மாற்ற முடியாது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.