ஜம்மு - காஷ்மீர் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
Jammu kashmir polling
ஜம்மு - காஷ்மீர் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.ENS
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

24 தொகுதிகளில் வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.

இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் உள்ளனா். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள். 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

இதில் 1.23 லட்சம் போ் 18 மற்றும் 19 வயதுடைய இளம் வாக்காளா்கள் ஆவா். எனவே, வெற்றியை உறுதி செய்வதில் இளைய தலைமுறையினா் வாக்கும் முக்கிய இடம் பிடிக்க இருக்கின்றனா்.

தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,000-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியாளா்கள் தோ்தலை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 302 வாக்குச் சாவடிகள் நகா்புறங்களிலும் 2,974 வாக்குச் சாவடிகள் கிராமப் பகுதிகளிலும் உள்ளன.

10 ஆண்டுகளுக்கு பிறகு

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பேரவைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

3 கட்ட தேர்தல்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com