
மதுரா (உத்தரப் பிரதேசம்): உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுராவில் புதன்கிழமை இரவு சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்ரா பிரிவு டிஆர்எம் தேஜ் பிரகாஷ் அகர்வால் கூறுகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற "ஒரு சரக்கு ரயில் புதன்கிழமை இரவு 8.12 மணியளவில் சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டால் அந்க பகுதியில் மூன்று ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் முடிக்கிவிடப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.