2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

2025-இல் க்வாட் தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் மகிழ்ச்சி...
2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி
படம் | பிடிஐ
Published on
Updated on
1 min read

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, “3-ஆவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், க்வாட் மாநாட்டில் பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. க்வாட் முதல் உச்சி மாநாடு முதன்முறையாக 2021-இல் உங்கள்(பைடன்) தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், குறுகிய காலத்தில் நம் ஒத்துழைப்பை ஒவ்வொரு திசையில் விரிவுபடுத்தியுள்ளோம்”.

“அதிபர் பைடன் உள்பட அனைத்து தலைவர்களுக்கும் வாழ்த்துகள். 2025-இல் க்வாட் தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”.

“உலகம் சண்டை மற்றும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் க்வாட் மாநாட்டில் நாம் கலந்துகொண்டுள்ளோம். இந்த சூழலில், ஜனநாயக மதிப்புகளின் அடிப்படையில் மனிதநேயத்துடன் க்வாட் உறுப்பினர்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

க்வாட் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாம் அனைவரும், சர்வதேச ஆணைகளின் அடிப்படையில் விதிகளை ஆதரிக்கிறோம். இறையாண்மை மற்றும் எல்லைப்புற ஒருமைப்பாட்டுக்கு மரியாதை அளிக்கும் விதிகளை ஆதரிக்கிறோம்.

நாம் உலகுக்கு சொல்ல வேண்டிய விஷயம் வெளிப்படையானது: உலகுக்கு உதவிடவும், பங்களிப்பை அளிக்கவும், நிலைத்தன்மையுடன் க்வட் திகழ்கிறது” என்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ”நாம் அனைவரும் ஜனநாயக நாடுகள். சவால்கள் வந்தாலும், உலகம் மாறினாலும், க்வாட் இங்கே நிலைத்தன்மையுடன் விளங்கும்” என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.