செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வெற்றி: ராகுல், உதயநிதி வாழ்த்து!

செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ராகுல், உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்
செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்X | Rahul Gandhi
Published on
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ராகுல், உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் இன்று (செப். 22) நடைபெற்ற ஸ்லோவேனியா அணிக்கு எதிரானப் போட்டியில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் ``செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அவர்களின் குழுக்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

உங்களின் திறமை, புத்திசாலித்தனமான உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்து விட்டன. நீங்கள் அனைவரும் தொடர்ந்து சிறந்த வெற்று பெற்று விளங்க வாழ்த்துகிறேன். உங்கள் பொன்னான வெற்றி, நாட்டையே பெருமையடையச் செய்துள்ளது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ``ஹங்கேரியில் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், இந்திய அணி மீண்டும் சதுரங்கத்தில் தனது புகழை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு ஒரு சிறப்பு கைதட்டல்.

பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் அடங்கிய முழு குழுவையும் நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த அற்புதமான சாதனைக்கு நமது இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com