இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடியாக உயர்வு!

தொலைத்தொடர்புத் துறையில் 100 நாள் சாதனை: இந்தியாவில் 95 கோடி மக்களை இணைய சேவை சென்றடைந்துள்ளது
இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடியாக உயர்வு!
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மோடி 3.0-இன் 100 நாள்கள் என்ற பெயரில் மத்திய அமைச்சரவைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை அந்தந்த துறைசார் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தொலைத்தொடர்புத் துறையில் கடந்த 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று(செப்.23) செய்தியாளர்களுடன் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நாட்டில் கைப்பேசி தொலைத்தொடர்பு இணைப்புகளைப் பெற்று பயன்படுத்துவோர் எண்ணிக்கை 90 கோடியிலிருந்து தற்போது 117 கோடியாக உயர்ந்துள்ளது. முன்னதாக, உலக அரங்கில் தொலைத்தொடர்பு சந்தையில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்திருந்தது குறிப்பிடத்த்க்கது. அத்துடன், தற்போது இணைய சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 95 கோடி மக்களை இணைய சேவை சென்றடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி இணைய சேவையை உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பதே பிரதமர் மோடியின் கனவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மேலும் பேசியதாவது, “இன்று, சொந்தமாக 4ஜி இணைய சேவையை வழங்குதல் மற்றும் அதன் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உலகளவில் 6-ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது.

3-ஆவது முறை ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த ஆட்சிக்காலத்தில் 100 சதவிகித தன்னிறைவு அடைவதை இலக்காக நிர்ணயித்துள்ளோம். செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான 100 நாள்களில் நாடெங்கிலும் 7,258 தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன” என்றார்.

இதனிடையே, ஜூன்-5, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாடெங்கிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் தனிநபர்கள் தங்கள் தாய்மார்களைக் கௌரவிக்கும் விதமாக பிரதமரால் தொடங்கப்பட்ட மரம் நடும் திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியையும் அமைச்சர் இன்று அறிமுகப்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com