
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கு பரிகாரமாக தான் விரதமிருந்து சுவாமியை வழிபடப் போவதாக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இன்று(செப்.24) காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, இன்று காலை கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் பக்தர்களுடன் ஈடுபட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.