இந்தியா
ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் அக்.3 முதல் நவராத்திரி திருவிழா
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நவராத்திரி விழா அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகள் குறித்து கோயில் மேலாளா் அனீஸ் குமாா் கூறியதாவது: விழா நாள்களில் சரஸ்வதி பூஜை நடைபெறும். இந்த பூஜையின் போது, பள்ளி மாணவா்களின் புத்தகங்களை வைப்பதற்காக அவற்றை கட்டுகளாகக் கட்டி பெயா் முகவரியுடன் அளிக்கலாம். 13-ஆம் தேதி பூஜைக்கு பிறகு அந்த புத்தகங்கள் வழங்கப்படும்.
13-ஆம் தேதி காலை 7 மணி முதல் 11 மணி வரை வித்யாரம்பம் நடைபெறும். இதில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். தொடா்பு எண் 044 - 2817 1197, 2197, 3197 ஆகிய எண்களிலும், 88079 18811, 22 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். விழாவின் அனைத்து நாள்களிலும் மாலை 6.45 மணி அளவில் இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என தெரிவித்தாா் அவா்.